"லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்.. படித்த பின் பிச்சை எடுக்காதே".. டிஎஸ்பி அறிவுரை!

Oct 31, 2023,04:29 PM IST

- மஞ்சுளா தேவி


தேவகோட்டை: லஞ்சம் என்பது அடுத்தவரிடம் கைநீட்டி பிச்சை எடுப்பதற்கு சமம். பிச்சை எடுத்தாவது படி ஆனால் படித்து பதவி வந்தவுடன் பிச்சை எடுக்காதே என்று டிஎஸ்பி ஜான் பிரிட்டோ பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விழா சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 




சிவகங்கை மாவட்ட ஊழல் மற்றும் விழிப்புணர்வு கண்காணிப்பு துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ கலந்து கொண்டு லஞ்சம் கொடுப்பதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:


பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அதிக ஆசைப்படக்கூடாது. எங்களுக்கு புகார் வந்தால் லஞ்சம் கேட்பது உண்மை என்று தெரிந்தால் விசாரித்து நேரடியாக உண்மையை நிரூபிப்போம். லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் .நேர்மையை நிலை நாட்டுங்கள். ஆசை அதிகமாகவதே லஞ்சத்துக்கு காரணமாகும்.  நமது பயம் ஒழிந்தால் லஞ்சம் ஒழியும். லஞ்சம் வாங்குபவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடும் என்றார் அவர்.


மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் லஞ்சம் என்றால் என்ன ?ஊழல் என்றால் என்ன? அது எங்கெல்லாம் அதிகம் உள்ளது போன்ற தகவல்களை விளக்கினார் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ. புதிய சட்டத்தின்படி லஞ்சம் வாங்கி பிடிப்பட்டால் நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை உண்டு, லஞ்சம் ஊழல் தொடர்பாக தகவல் தெரிந்தால் 9498190140 மற்றும் 04575-240222 என்ற எண்ணில் தன்னை தொடர்பு கொள்ளலாம். லஞ்சம் என்பது அடுத்தவரிடம் கைநீட்டி பிச்சை எடுப்பதற்கு சமம்.பிச்சை எடுத்தாவது படி ஆனால் படித்து பதவி வந்தவுடன் பிச்சை எடுக்காதே என்றும் கூறினார்.




இவ்விழா நிறைவு பெற்ற பின்னர் விஜிலன்ஸ் பிரிவின் முதுநிலை  காவலர்கள்  தனபாலன், கண்ணன் ஆகியோர் விழிப்புணர்வு உறுதி கூற மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .சிறப்பாக கேள்வி கேட்ட மாணவர்களுக்கும், நிகழ்வில் லஞ்ச விழிப்புணர்வு  தொடர்பாக கூடிய தகவல்களை உள்வாங்கி பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


ஊழல் என்பது ஒரு தனிப்பட்ட தனி மனிதனின் செயல் மட்டுமல்லாமல் ஒரு தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கும். பணம் படைத்தவர்கள் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் திறமை மிக்கவர்களின் வாய்ப்பை ஊழலால் பறிக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரிகளே இந்த தவறை செய்வது ஏழை எளிய பாமர மக்களை பாதிக்கின்றது. இதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க  வேண்டியவை தடுக்கப்படுகிறது. 




இந்த தவறு தொடர்ந்து கொண்டே போனால் நாட்டின் பொருளாதாரம் சரியும் நிலைக்கு தள்ளப்படும். ஊழல் தடுப்பு சட்டம் இருந்தும் இதுபோன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இனிவரும் தலைமுறையாவது மாணவ- மாணவியர்கள் ஒவ்வொருவரும் ஜனநாயகத்தின் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்