சென்னை: காலையிலேயே முதல் வேலையாக காபி குடிப்பதை சிலர் பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அது ரொம்பத் தவறான பழக்கமாம் மக்களே.
காபி உலக அளவில் அதிகம் குடிக்கும் பானங்களில் ஒன்று. காபி குடிப்பவர்களுக்கு அது என்ன செய்கிறது என்று தெரியும். காபி குடிப்பவர்கள் அதை விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது ஆற்றல் தருவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, நாள் முழுவதும் செயல்திறனை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகளைத் தருகிறது. ஆனால், எழுந்தவுடன் காலையில் முதல் காபி குடிப்பது நல்லதல்ல.
நிபுணர்களின் கூற்றுப்படி, காபியை காலையில் தாமதமாக குடிப்பது நல்லது. இதனால் நன்மைகள் அதிகமாகும். தூக்கத்தின் மீது ஏற்படும் தாக்கம் குறையுமாம். பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரும், "How Not to Eat Ultra-Processed" என்ற புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் நிக்கோலா லுட்லாம் ரைன் இதுகுறித்துக் கூறுகையில், காபி குடிக்க சிறந்த நேரம் காலை 9:30-11:30 AM ஆகும். காபி குடிப்பதால் இதய நோய், கல்லீரல் பிரச்சனைகள், அல்சைமர், பார்க்கின்சன் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆனால் காபி குடிக்கும் நேரத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும்.
காலை எழுந்தவுடன் காபி குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும்?
லுட்லாம்-ரைன் கருத்துப்படி, எழுந்தவுடன் காபி குடிப்பதால் அதன் பலன் குறையும். ஏனென்றால், அந்த நேரத்தில் கார்டிசோல் ஹார்மோன் அளவு குறையத் தொடங்கும். கார்டிசோல் என்பது விழிப்புணர்வு ஹார்மோன். இது காலையில் அதிகமாக இருக்கும். எனவே, காலையில் தாமதமாக காபி குடிப்பதால் ஒரு ஊக்கம் கிடைக்கும். அதேபோல நாளின் பிற்பகுதியில் காபி குடிப்பதை தவிர்க்கவும். குறிப்பாக காஃபின் உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால். காஃபின் உங்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது.
காபி உங்கள் உடலில் குறைந்தது ஆறு மணி நேரம் இருக்கும். எனவே, நீங்கள் பிற்பகலில் குடித்தாலும், அது மாலை நேரத்திலும் உங்களை பாதிக்கும். எனவே, உங்கள் தூக்க சுழற்சியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு நாளும் மூன்று மணிக்கு பிறகு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது காஃபின் கலந்த காபி குடிப்பவர்களுக்கு பொருந்தும். டீகாஃப் காபியில் மிகக் குறைந்த அளவு காஃபின் உள்ளது (ஒரு கப் காபியில் 2-5 mg மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் சாதாரண காபியில் 70-150 mg உள்ளது). இது பெரும்பாலான மக்களுக்கு தூக்கத்தை பாதிக்க வாய்ப்பில்லை. ஆனால், காஃபின் உணர்திறன் உள்ளவர்கள் படுக்கப் போவதற்கு முன்பு டீகாஃப் காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சில வகையான காபிகள் உங்கள் ஆரோக்கியத்தில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இன்ஸ்டன்ட் காபி வயது தொடர்பான மாகுலர் சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒரு மீள முடியாத நிலை. இது படிப்படியாக பார்வையிழப்புக்கு வழிவகுக்கும்.
காபியின் ஆரோக்கிய நன்மைகள் :
தினமும் ஒன்று முதல் இரண்டு கப் காபி குடிப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இதயம் பலவீனமாக இருக்கும்போது உடலுக்கு போதுமான இரத்தம் பம்ப் செய்ய முடியாமல் போனால் மாரடைப்பு ஏற்படும்.
சாதாரண மற்றும் டீகாஃப் காபி இரண்டும் உங்கள் கல்லீரலுக்கு பாதுகாப்பானவை. காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் நொதி அளவு ஆரோக்கியமான வரம்பில் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
வறுத்த காபி DNA இழைகளில் ஏற்படும் முறிவுகளை குறைக்க உதவுகிறது. இது இயற்கையாகவே நிகழ்கிறது. ஆனால் உங்கள் செல்களால் சரி செய்யப்படாவிட்டால் புற்றுநோய் அல்லது கட்டிகளை ஏற்படுத்தும்.
தினமும் இரண்டு கப் காபியில் உள்ள காஃபின் அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோய்கள் வராமல் தடுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உண்மையில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் தினமும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடித்தால் அவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2025... இன்று நல்லது நடக்கும்
{{comments.comment}}