விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா?... அன்புமணி ராமதாஸ்!

May 26, 2025,06:28 PM IST

சென்னை:  திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து  டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சென்னையை அடுத்த  திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலை சீரழித்து, அதில் 8.48 ஏக்கர் பரப்பளவில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த  திருவேற்காடு நகராட்சி தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் கூட  இதை செயல்படுத்துவதில்  நகராட்சி நிர்வாகம் பிடிவாதம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.


விளையாட்டுத் திடலுக்கு அருகில் 169 ஏக்கர் பரப்பளவுள்ள கோலடி ஏரி அமைந்துள்ளது. திருவேற்காடு நகரத்தின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி தான் திகழ்கிறது. இந்த ஏரிக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் ஏரி மாசு படுவதுடன், நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படும்.  அங்குள்ள பள்ளிகள், மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான தொகுப்பு சமையல் கூடம், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். திருவேற்காடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகில், கூவம் நதிக்கரையோரம்  உள்ள அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர்  நிலத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம். ஆனால், ஊருக்கு நடுவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க நகராட்சி துடிப்பது ஏன்?




ஒருபுறம் தொகுதிக்கு ஓர் விளையாட்டுத் திடல் என்று அறிவித்து அதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, இன்னொருபுறம் விளையாட்டுத் திடல்கள் அழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பது நகைமுரண். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு,  கோலடி விளையாட்டுத் திடலில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை  தடுத்து நிறுத்த  வேண்டும்; அங்குள்ள விளையாட்டுத்திடலை கூடுதல் வசதிகளுடன்  மேம்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்