சென்னை: திருப்போரூரில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைபயணத்தை திட்டமிட்டப்படி தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸிற்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாமகவை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் புதிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். அதன்படி, ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் இன்று தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், சிறப்பு பொதுக்குழுவின் படி பாமக செயல்தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறிக்கொண்டால் நடவடிக்கை பாயும். நடைப்பயணத்தின் போது பாமக கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது. அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாமக தலைமையகம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாமகவிற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. தொண்டர்களும், நிர்வாகிகளும் இனி வேறெங்கும் செல்ல வேண்டாம் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அன்புமணி ராமதாஸின் நடைபயணம் நடக்குமா? நடக்காத என்று கட்சி தொண்டர்களிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திட்டமிட்டபடி பயணம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமதாஸின் பெயர் அச்சிடப்படாத பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}