என்எல்சியை இழுத்து மூடுங்க.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கோரிக்கை

Aug 23, 2023,02:55 PM IST
சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா? என்று கேட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு,என்.எல்.சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்?



ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆயிரம் மடங்கு அதிகம்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி... என்.எல்.சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்பதே பெரும் அநீதி ஆகும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவிருந்த காரணங்கள் அனைத்தும் என்.எல்.சி. நிறுவனத்துக்கும் பொருந்தும்.
மண்ணுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தையும் மூட வேண்டும். இனியும் தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்