டில்லி : டில்லி சென்றுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாஜக மேலிட தலைவர்கள் சிலரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாமக.,விலும் தமிழக அரசியலிலும் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. எம்.பி., என்ற முறையில் அன்புமணி அடிக்கடி டில்லி சென்று வருவது புதிய விஷயம் கிடையாது. அப்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பும் அவர் டில்லி புறப்பட்டு சென்றார். ஆனால் இந்த முறை, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்திப்பதற்கு அன்புமணி நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு தேர்தல் ஆணையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது அனைவரின் கவனத்தையும் தற்போது டில்லி பக்கம் திருப்பி உள்ளது.

பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ், கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தானே கட்சியின் தலைவர் என அறிவித்து, அதிரடியாக பலரின் பதவிகளை பறித்து வருகிறார். அதோடு பாஜக.,வுடன் கூட்டணி வைப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறை மீண்டும் அதிமுக.,வுடன் கூட்டணியை புதுப்பிக்கலாம் என்றால், அதிமுக.,வே பாஜக உடன் கூட்டணியை அறிவித்து, தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. இப்போது பாஜக-அதிமுக கூட்டணியில் இணையலாமா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் பாமக இருந்து வருகிறது.
இந்த சமயத்தில் பாஜக மேலிட தலைவர்களை அன்புமணி எதற்காக சந்திக்கிறார்? பாஜக உடன் கூட்டணி வைக்க நினைக்கிறாரா? அல்லது பாமக.,வில் அப்பா-மகன் விவகாரத்தில் சமரச முயற்சியை பாஜக துவக்கி உள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் தேர்தல் ஆணையத்திற்கும் அன்புமணி செல்கிறார் என்றால் கட்சி தொடர்பாக முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}