சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நீக்கம் தொடர்பாக என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்சுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. நேற்று முன்தினம் அன்புமணியை திடீர் என பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியனார் ராமதாஸ். இனி நானே தலைவர் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி அன்பு மணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

இது, பாமக கட்சியினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு தொடர்ந்து ராமதாஸ் வீட்டிலும், அன்புமணி வீட்டிலும் குடும்பத்தினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அது மட்டுமின்றி பாமக மூத்த கட்சி உறுப்பினர்களும் இருவரையும் சமாதனப்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும்செல்லவில்லை. ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமக கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}