சென்னை: தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வந்தே தீரும். பாஜக கூட்டணி குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
அன்புமணி உடனான பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும். சரி செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். சென்னைக்கு வந்த இரண்டு நாள் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். . பாஜக கூட்டணி குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும். தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்.
எந்த கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது. கூட்டணி குறித்து நேரம் வரும்போது சொல்கிறேன். தற்போது சொல்வதற்கு புதிய செய்தி ஒன்றும் இல்லை. வியாழக்கிழமை தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். அப்போது நல்ல செய்தி வரும் தீர்வு ஏற்படும் போது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. உங்களிடம் இருந்து நீங்கா விடை பெறுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}