சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

Apr 03, 2025,06:10 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி. தமிழக அரசு உடனடியாக  தலையிட்டு தமிழக நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,




சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!


சென்னை  மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் 118.9 கி.மீ. நீளத்திற்கு  மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாதைகளில் மெட்ரோ ரயில்களை இயக்கும் உரிமையை  தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இது சமூகநீதிக்கும், தமிழக இளைஞர்களின் நலனுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


இந்த நடவடிக்கையால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கி, பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான பணியாளர்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பதிலாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனமே தேர்வு செய்து நியமிக்கும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கிப் பராமரிக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே செய்து வருகிறது. அதனால், அதற்கு தேவையான பணியாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அந்தப் பணியாளர்களுக்கு தமிழ் மொழியில் பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் தேர்வில்  69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்ட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் வேலைவாய்ப்பு உரிமையும், சமூகநீதியும் பாதுகாக்கப்படுகிறது.


ஆனால், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட போக்குவரத்தை இயக்கும் பொறுப்பு தில்லி மெட்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான பணியாளர்களை  இந்தியா முழுவதிலும் இருந்து அந்த நிறுவனம் தேர்வு செய்யும். அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காது. அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டு முறையில் பின்பற்றப் படாது. இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இவை அனைத்துக்கும் மேலாக, தமிழ் தெரியாத பணியாளர்கள் பணியமர்த்தப்படும் போது, அவர்களால் சென்னை மாநகர மக்களுக்கு சரியாக சேவை செய்ய முடியாது. தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இது தவிர்கப்பட வேண்டும்.


சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதன்மை பங்குதாரர் தமிழக அரசு தான். தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த முடிவை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்ததா? அல்லது  தன்னிச்சையாக எடுத்ததா? என்பது தெரியவில்லை. இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழக நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்