சென்னை: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அவரது கணவர் செளந்தரராஜன், மகள் டாக்டர் பூவினி ஆகிய மூவரிடமும் ஆளுக்கு தலா ரூ. 50,000 ரொக்கம் கையில் இருப்பதாக தேர்தல் ஆவணத்தில் டாக்டர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மீண்டும் மக்கள் பணியாற்றுவதற்காக, அரசியல் களத்தில் மீண்டும் குதித்து விட்டார். தாமரை தமிழ்நாட்டு லோக்சபா தேர்தலில் மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் இறங்கியுள்ள அவர் தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கலின்போது அவர் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் தனது சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்படி பார்க்கும்போது டாக்டர் தமிழிசை பெயரில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. தமிழிசை, அவரது கணவர் செளந்தரராஜன், மகள் பூவினி ஆகியோரது ரொக்கக் கையிருப்பு ஆளுக்கு ரூ. 50,000 மட்டும்தான்.
வங்கியில் இருப்பு:
டாக்டர் தமிழிசை - 1 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரத்து 286 ரூபாய்
கணவர் டாக்டர் செளந்தரராஜன் - ரூ. 3,92,01,426
மகள் டாக்டர் பூவினி - ரூ. 1,04,61,819
தமிழிசை பெயரில் நிலம், நீச்சு என்று எதுவும் கிடையாது. கார் உள்ளிட்டவையும் கூட அவர் பெயரில் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிடப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டம் மணலியில் 1800 சதுர அடி பரப்பளவில், ஒரு வீடு மட்டும் அவரது பெயரில் உள்ளது. 2001ல் வாங்கப்பட்ட வீடு இது. தற்போது இந்த வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன் என்று அடிக்கடி நெக்குருகி கூறும் டாக்டர் தமிழிசைக்கு வங்கியில், ரூ. 58,54,789 அளவுக்கு கடன் பாக்கி உள்ளது.
டாக்டர் தமிழிசை பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு 1,57,40,286 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}