அந்தப் பக்கம் டாக்டர் தமிழிசை.. இந்தப் பக்கம் உதயநிதி.. மறுபக்கம் கனிமொழி.. பரபரப்பான தூத்துக்குடி!

Dec 25, 2023,05:44 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்யவும், மக்களை சந்திக்கவும் வருகை தந்ததால் மாவட்டமே பரபரப்பாக காணப்பட்டது.


தூத்துக்குடி  மாவட்டத்தில் வெள்ளம் வந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது முதல் கனிமொழி எம்.பி. அங்கேயேதான் முகாமிட்டுள்ளார். அவர் தான் தூத்துக்குடி எம்.பி. என்பதால் கூடுதல் அக்கறையோடு அங்கேயே தங்கியிருந்து மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். பலரை மீட்க உதவியுள்ளார். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மீட்டார். அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு தனது பெயரையே கனிமொழி வைத்து மகிழ்ந்தார்.




கனிமொழி இன்று பெரியநாயகபுரம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதேபோல பழைய காயல் கணேசபுரம் பகுதிக்கும் சென்று  மக்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களைச் சந்தித்து வருகிறார் கனிமொழி.


கனிமொழியுடன் திமுகவினரும், அதிகாரிகளும் உடன் சென்றனர். மக்களின் தேவைகள் குறித்து உடனடியாக நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளிடம் கனிமொழி கேட்டுக் கொண்டார்.  கனிமொழியுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் உடன் சென்றார்.


உதயநிதி ஸ்டாலின்




மறுபக்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து விஜயம் செய்து நிவாரணப்  பணிகளை முடுக்கி விட்டார். தொடர்ந்து அங்கு சுற்றுப் பயணம் செய்து நிவாரணப் பணிகள் சரியாக நடக்கின்றனவா என்று பார்த்து வருகிறார். இன்றும் அவர் தூத்துக்குடிக்கு வந்தார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பாதிப்பை சந்தித்த பகுதிகளில் ஒன்று தான் ஏரல். ஏரலில் இருந்து திருச்செந்தூர் , திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வற்தான சாலைகளை இணைக்கின்ற ஆற்றுப்பாலம், கடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.  இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கின்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில் அதனை இன்று ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, எ வ வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


அதைத் தொடர்ந்து கடைத் தெருவுக்குச் சென்று அங்கு வியாபாரிகள், பொதுமக்களிடம் குறை கேட்டார் உதயநிதி ஸ்டாலின். இதுதவிர பல்வேறு நல உதவிகளையும் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.


டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்




மறுபக்கம் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் இன்று தூத்துக்குடிக்கு விஜயம் செய்தார். தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் அங்கு போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வியைச் சந்தித்தவர் டாக்டர் தமிழிசை. அதன் பின்னர்தான் அவர் ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டார்.


ஆளுநர் பதவிக்குப் போய் விட்டாலும் கூட, தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கேற்ப தான் போட்டியிட்ட தூத்துக்குடி  இன்று வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். மக்களிடம் குறைகள் கேட்டார். நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமிலும் கலந்து கொண்டார்.


இப்படி இன்று மூன்று முக்கியத் தலைவர்கள் தூத்துக்குடியில் முகாமிட்டு சுற்றுப்பயணம் செய்ததால் மாவட்டமே பரபரப்பாக காணப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்