வீட்டை தாண்டுனேனா.. மூக்கைத் துளைச்சிருச்சு.. அக்காவைத் தேடி வந்த சூடான அதிரசம்!

Apr 06, 2024,10:25 AM IST

சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது பெயரை பேசாமல் நிரந்தரமாக "அக்கா" என்றே மாற்றி வைத்து விடலாம்.. அந்த அளவுக்கு தொகுதியில் அவரது பெயர் அக்கா என்ற ரீச் ஆகி விட்டது. போகும்  இடமெல்லாம் அவரும் தனது பாசத்தை அள்ளித் தெளித்துச் செல்கிறார்.


தென் சென்னை மக்களவைத்  தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். தினசரி வாகனப் பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் டாக்டர் தமிழிசை, தன்னை அக்கா என்றே பிரகடனப்படுத்தி பிரச்சாரத்தில் பேசுகிறார். அவரது பிரச்சாரம் பலரையும் கவர்ந்துள்ளது. இயல்பாக பேசுகிறார், ஜாலியாக பேசுகிறார், தனது வாக்குறுதிகளையும் அழகாக எடுத்து வைக்கிறார்.




போகும் இடமெல்லாம் சாதாரண மக்களைக் கவரும் வகையில் பேசுகிறார். வழியில் எங்காவது குப்பைகள் கிடந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி, இப்படி குப்பைகளை கூட அகற்றாத நிர்வாகம்தான் நம்மிடம் உள்ளது. இதைப் பார்த்தால் எனக்கு குப்பையாகத் தெரியவில்லை. டெங்குவாகத் தோன்றுகிறது, காலராவாகத் தோன்றுகிறது என்று டைமிங்காக அடிக்கிறார். 


அதேபோல வழியில் ஏதாவது டீக்கடை, வடை கடை தென்பட்டாலும் விடுவதில்லை. அங்கும் புகுந்து விடுகிறார். ஜாலியாக பேசியபடி டீ சாப்பிட்டும், வடை சாப்பிட்டும் மக்களிடையே எளிமையாக பேசுகிறார். இந்த நிலையில் தி.நகர் நல்லாங்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அவர் ஒரு வீட்டைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னார். என்னடா என்று பார்த்தால் அந்த வீட்டில் அதிரசம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழிசையைப் பார்த்ததும் சூடாக நாலு அதிரசத்தை எடுத்து காகிதத்தில் வைத்து அன்போடு கொடுத்தார்கள். அதை பாசத்தோடு பெற்றுக் கொண்ட அதிரசம், இந்தப் பக்கம் கிராஸ் பண்ணும்போது அதிரசம் வாசம் மூக்கைத் துளைச்சுருச்சு.. அதான் நிறுத்தச் சொன்னேன் என்று புன்னகையுடன் கூறியபடி ஒரு அதிரசத்தை ஆன் தி ஸ்பாட்டிலேயே சுவைத்து சூப்பரா இருக்கு என்று கண்களாலேயே அந்த அம்மாவிடம் சந்தோஷமாக தெரிவித்து விட்டு விடை பெற்றார்.


பிரச்சாரக் களத்தில் களக்கும் டாக்டர் தமிழிசை, தென் சென்னையையும் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர்  பாஜகவினர்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்