டெல்லி: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுள்ளார். மேலும் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில்,நேற்று பேட்டி கொடுத்த தமிழிசையும், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டிலிருந்துதான் போட்டியிடுவேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை.எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம் தான் அறிவிக்கும். ஓரிரு நாளில் தொகுதி எது என்பதை பாஜக மேலிடமே அறிவிக்கும். நான் சொல்ல முடியாது என்று கூறினார்.
இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பிய கடிதங்களை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னரின் பொறுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் என்றும் குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளிட்ட செய்தி குறிப்பில், தமிழிசையின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் தென்சென்னை அல்லது திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}