- முனைவர் தி.தங்கலட்சுமி
திருத்தங்கள் மாற்றங்களுக்கு
இடமில்லா... வேலையுமில்லா...
முற்று முழுதாய் அச்சில் ஏறிய
புத்தக வெளியீடுகளே
மனிதப் பிறவிகள்!
பிரம்மன் படைத்திட்ட
அனைத்து வெளியீடுகளின்
இயங்குதளமே உலகம்!
உலகில் உலவிட
மனித பிறவிகளுக்கோ
எண்கோணத் திசைகள் - ஆனால்
மனதின் வாழ்விற்கோ
இருகோணத் திசைகள் மாத்திரமே!

நேரான வாழ்வைக் கோணலாக்கிடும்
எதிர்க் கோணத் திசையும்...
கோணலான வாழ்வை நேராக்கிடும்
நேர்க் கோணத் திசையும்...
மனித மனத்தினுள்ளே!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
{{comments.comment}}