சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் போன்றும், திரை பிரபலங்கள் போன்றும் வேடமிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள் மேடைக் கலைஞர்கள்.
சிறந்த நடிகராகவும், அரசியல்வாதியாகவும், திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28 இல் மறைந்தார். இவரின் இறப்பு செய்தி கேட்டு ரசிகர்கள், தொண்டர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் கண்ணீர் மல்க தங்களின் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். அவர் செய்த நன்மைகளை தினமும் மக்கள் பேசி பாராட்டி வருகின்றனர். இவரை நினைவிடத்தில் சென்றாவது பார்க்க வேண்டும் என தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரை பிரபலங்கள் என விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏராளமான கலைஞர்கள் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், வானத்தைப் போல, கஜேந்திரன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு படங்களின் உள்ள கதாபாத்திரம் போன்று வேடமிட்டு விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இது மட்டுமல்லாமல் ரஜினிகாந்த், அஜித், டி ராஜேந்தர் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் போன்றும், எம்.ஜி.ஆர், காந்தியடிகள், அறிஞர் அண்ணா, முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் போன்றும் வேடமணிந்து மலர் தூவி விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு வித்தியாசமான முறையில் வந்து அஞ்சலி செலுத்திய இந்தக் கலைஞர்களைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது. விஜயகாந்த் வேடத்தில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர்களை அனைவரும் பாராட்டினர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}