அகமதாபாத்: 3ஆம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் ஓட்டு போட்ட பிரதமர் மோடி, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அனைவரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மேலும், அது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும் என்று அட்வைஸ் கொடுத்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தற்போது 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். இது காந்தி நகர் லோக்சபா தொகுதிக்குட்பட்டதாகும். காந்தி நகர் தொகுதி 1989 முதலே பாஜக வசம் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட இந்த காந்தி நகர் தொகுதியில் இந்த முறை உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அனைவரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மேலும், அது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் தேர்தல் மேலாண்மை ஆகியவை உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் முடிந்த வரை வாக்களிக்க வேண்டும்.குஜராத்தில் நான் ஒரு வாக்களராக எப்பொழுதும் வாக்களிக்கும் இந்த தொகுதியை பாஜக சார்பில் அமித் ஷா போட்டியிடுகிறார். இந்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடக்கும் நிலையில் இதை ஜனநாயக திருவிழா என்று சொல்லலாம். உலகெங்கும் உள்ள நாடுகளில் நடக்கும் தேர்தல் முறைகளை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நான் மீண்டும் சொல்கிறேன் பொதுமக்கள் திரளாக வந்து வாக்களித்து இந்த ஜனநாயக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும்.
முதல் இரண்டு கட்ட தேர்தலை வன்முறை இல்லாமல் நடத்தியதற்கு தேர்தல் ஆணையத்தை வாழ்த்துகிறேன். மேலும் வாக்காளர்களுக்கு ஏற்ற வகையில் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}