டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை நோக்கி வந்த டிரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த சமயத்தில் அந்த வீட்டில் பிரதமரோ அல்லது அவரது குடும்பத்தினரோ யாரும் இல்லை. இந்த டிரோன் தாக்குதலால் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையிலான உரசல் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தரப்பில் ஏதாவது பெரிய அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இது பெரும் போராக உருவெடுக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. இஸ்ரேலைக் குறி வைத்து லெபனான், ஹமாஸ், ஈரான் ஆகியவை தாக்கி வருகின்றன. இஸ்ரேலும் முரட்டுத்தனமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.
நேற்றுதான் ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாகக் கொன்றது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரை லெபனான் குறி வைத்து டிரோன் தாக்குதலை நடத்தியதால் பரபரப்பு கூடியுள்ளது. இஸ்ரேலின் சீசரியா என்ற நகரில் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவின் வீடு உள்ளது. இந்த வீட்டை நோக்கி ஒரு டிரோன் பறந்து வந்தது. ஆனால் வீட்டின் மீது விழாமல் அருகில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது பிரதமரும், அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானிலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த டிரோனை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுக்க இயலாமல் போனது தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை இந்த டிரோன் வீட்டில் விழுந்து, பிரதமரும் அவரது குடும்பத்தினரும் இருந்திருந்தால் விபரீதமாக போயிருக்கும் என்பதால் இஸ்ரேல் தரப்பும் அதிர்ச்சியில் உள்ளது. அதேசமயம், மேலும் இரு டிரோன்களை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தாக்கி தகர்த்து விட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}