சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 8 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம், ஒரு சில நாட்கள் மழை பெய்ததால் வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்ததால் வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் குளுமையான நல்ல சீதோசன நிலை காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே வறண்ட கிழக்கு காற்று ஊடுருவி இருப்பதால் கடல் காற்று முற்றிலும் தடைப்பட்டதன் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மதிய வேலைகளில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 8 தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}