சென்னை: துல்கர் சல்மான், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் காந்தா படத்தின் டீசர் வெளியானது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் தான் காந்தா. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. துல்கரும் ராணா டக்குபதியும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முக்கிய காதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன. துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!
ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!
{{comments.comment}}