திருச்சி கோட்டையை வெல்வாரா துரை வைகோ.. முதல் முறையாக தேர்தல் களம் காணும் வைகோ வாரிசு!

Mar 18, 2024,04:57 PM IST
சென்னை: திருச்சியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக   நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் எனவும்  தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார்  அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பிற்கு பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் இன்று மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதிமுக நிறுவனர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.



2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. தற்போது அந்த திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற முறை மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது. அந்தத் தொகுதியை திமுக தற்பொழுது எடுத்துக் கொண்டுள்ளது.

திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். துரை வைகோவை வெற்றி பெற வைப்பது எங்களது பொறுப்பு என்று ஏற்கனவே திருச்சி திமுக தலைவர்கள் தலைமைக்கு உத்தரவாதம் கொடுத்து விட்ட நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வெளிவந்த நிலையில், திமுக மற்றும் மதிமுக என இருதரப்பு கட்சினர்களும் மிகுந்த உட்சாகத்தில் உள்ளனர்.

துரை வைகோ முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். மிகவும் சாந்தமானவரான துரை வைகோ சந்திக்கும் முதல் தேர்தல் மிகவும் பாதுகாப்பான தொகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வெல்லவே, திமுகவின் பலம்தான் முக்கியக் காரணம். எனவே துரை வைகோவின் வெற்றி உறுதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்