பாங்காக்: மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது 1000த்தை கடந்துள்ளது.
மியான்மர் தலைநகர் நய்பியாடாவ் நகரிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் என்ற நகரில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்த நிலநடுக்கம் பாங்காக்கிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் வட பகுதி, பாங்காங்க்கிலும் மற்றும் சீனாவின் யுனான் மாகாணத்திலும் பூகம்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.
மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1000த்தை கடந்துள்ளது. சுமார் 1600க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டுசக் மார்கெட் பகுதியில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்றும் தெரியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகேயும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}