மின் இணைப்பு நம்பரைக் கொடுங்க.. கரண்ட் பிரச்சினை சரியாகும்.. அசத்தும் அமைச்சர்

Apr 30, 2023,10:33 AM IST
சென்னை: கரண்ட் கட் என்று கூறி சமூக வலைதளங்களில் பலரும் பீதி கிளப்பும் நிலையில் மின்சாரத் துறை அமைச்ச் செந்தில் பாலாஜி அதிரடியாக அங்கெல்லாம் விசிட் அடித்து பிரச்சினைகளை சரி செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி விட்டது. வழக்கமாகவே கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதனால் மின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கும். இதில் ஆட்சி பாகுபாடெல்லாம் கிடையாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மின்வெட்டுப் பிரச்சினை வரத்தான் செய்யும். காரணம், நமது மின் கட்டமைப்பு இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டியிருப்பதால்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் எங்க வீட்ல கரண்ட் இல்லை, எங்க ஏரியாவுல கரண்ட் இல்லை என்று போஸ்ட் போட்டு வருகின்றனர். இவர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே நேரடியாக களம் இறங்கி தீர்வு கண்டு வருகிறார்.




சமீபத்தில் கூட ஒருவர் ஒரு பத்திரிகையில் வெளியான கார்ட்டூனைப் போட்டு கரண்ட் கட் ஆரம்பித்து விட்டது என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு பதில் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சகோதரரே உங்களது மின் இணைப்பு எண்ணைக் கூறவும் என்று கேட்டிருந்தார்.  ஆனால் அந்த நபரோ போட்ட டிவீட்டையே டெலிட் செய்து விட்டார்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரப் பிரச்சினை தொடர்பாக புகார் கூறிய ஒருவருக்கு பிரச்சினையை உடனடியாக சரி செய்து பதிலும் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுதொடர்பாக குமரேசன் என்பவர் போட்ட டிவீட்டில், சார், நான் புதுகை மாவட்டம், ஆ.கோவில் தாலுகா, கரூர் அருகில்  நிறைமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் உள்ள மின்மாற்றியில் இரவு நேர்த்தில் சரியான அளவு மின்சாரம் கிடைப்பது இல்லை. இரவு காற்றாடி, குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி அனைந்து விடுகிறது என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்புச் சகோதரரே, உங்கள் இல்லத்தில் இருந்த மின்னழுத்த குறைபாடு சீர் செய்யப்பட்டது.. அலைபேசி எண்களுக்கு மாற்றாக,  நண்பர்கள் மின் இணைப்பு எண்ணை வழங்கினால், விரைந்து குறைபாடுகளை களைய ஏதுவாக இருக்கும்.. என்று கூறியுள்ளார்.

இப்படி எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழ்நாடு அமைச்சர்கள் களம் இறங்கினால், அதிகாரிகளும் துரிதமாக வேலை பார்ப்பார்கள், மக்களுக்கும் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.. சிஸ்டமும் சற்று சரியாகும்.. நல்ல விஷயம்தான், பாராட்டுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்