கொச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் வைத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் 5 நாட்கள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் அவரது தம்பி அசோக் குமார், அவரது மனைவி ஆகியோரையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் கொச்சியில் பதுங்கியிருந்த அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அவரை சென்னைக்கு அழைத்து வரலாம் அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவர் திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தம்பியும் இப்போது சிறைக்குப் போகவிருப்பது கரூர் அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}