டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
டெல்லி மாநில அரசின் மதுக் கொள்கையில் நடந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி தலைவர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்போது இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விசாரிக்கவுள்ளது அமலாக்கத்துறை. இன்று விசாரணைக்கு அவர் ஆஜராகவுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் படு சூடாக காணப்படுகிறது. கெஜ்ரிவாலைக் கைது செய்தாலும் அவர் பதவி விலக மாட்டார். சிறையிலிருந்தே ஆட்சியையும், கட்சியையும் நடத்துவார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கோபாவேசமாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் வீடு மட்டுமல்லாமல், அவருக்குத் தொடர்புடைய 9 இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றந.
தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்குமார் ஆனந்த், இதற்கு முன்பு கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}