சென்னை: அமைச்சர் கே.என் நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி அருண் மற்றும் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.பி.கே குழுமம் மற்றும் டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூபாய் 100 கோடி ரொக்க பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் நடத்தக்கூடிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அடையாறு தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆழ்வார்பேட்டையில் கே என் நேருவின் மகன் எம்.பி அருணுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தற்போது அமலாக்க துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்க துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக மூத்த அமைச்சரான கே.என் நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர் நோக்க திமுக தயாராகி வரும் நிலையில், திமுக அமைச்சர் மகன் மற்றும் தம்பி வீடுகளில் சோதனை நடைபெறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பாகிஸ்தான் நம்மை அழிக்க நினைப்பதற்குள்.. பாதி பாகிஸ்தான் காலி.. இந்தியாவின் பலம் இதுதான்!
கூலி படத்தில் ரஜினிகாந்த்தின் சம்பளம் என்ன தெரியுமா.. ஸ்ருதி ஹாசனுக்கு இவ்வளவா?
மாமியாரின் போக்கில் கோபம்.. கூட்டாளிகளுடன் சேர்ந்து.. கர்நாடக டாக்டர் எடுத்த விபரீத முடிவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்?.. டாக்டர் அன்புமணி கேள்வி
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு.. மதுரை தவெக மாநாட்டின் தீம்!
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம்.. சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகா சங்கடஹர சதுர்த்தி.. அண்ணன் விநாயகர் மட்டுமல்ல.. தம்பி முருகனையும் வழிபட சிறந்த நாள்!
பொறுப்பில்லாமல் பேசும் ஆசிம் முனீர்.. இந்தியா கண்டனம்.. சரி, பாகிஸ்தானிடம் என்னதான் இருக்கு?
ஆன்மீகத்தின் தொடக்கம் எது?
{{comments.comment}}