உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Mar 28, 2023,10:45 AM IST
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தடை நீங்கியதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுகவின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் மார்ச் 26ம் தேதி அவரை பொதுச்  செயலாளராக தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலும் அறிவிக்கப்பட்டது.



இதற்கான மனுத்தாக்கல் செய்ய மார்ச் 19ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான அன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில் தேர்தலை நடத்தக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலை  நடத்தலாம். அதேசமயம், அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை  முடிவை அறிவிக்க தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் இன்று நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அதில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.. மேலும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை உடனடியாக கட்சித் தலைமை அறிவித்தது. தேர்தலை நடத்திய நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்து அதற்கான சான்றிதழையும் அவரிடம் அளித்தார். மிகப் பெரிய அளவில் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் கைத தட்டியும், உற்சாக குரல் எழுப்பியும் வரவேற்றனர்.

அதிமுக தலைமைக் கழகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு, எடப்பாடி தேர்வை வரவேற்று மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்