புதுக்கோட்டை: மக்களுடைய பிரச்சினையை தெரியாத அரசாக தான் திமுக அரசு உள்ளது. நான் விஜய் சீமானை இதுவரை நேரடியாக அழைக்கவில்லை. எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம். தேர்தலுக்குள் நல்ல நிலை உருவாகும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் மரியாதை என்பதே இல்லை, நேர்மையாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் தான் பரிசாக திமுக அரசு கொடுக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. காவல்துறை அதிகாரிகளுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக அதிகாரிகள் அழைத்து பேசி அதனை தீர்த்து வைக்க வேண்டும், இதுதான் அரசின் கடமை.
அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று திமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் நீங்கள் போடுகிறீர்கள் என்று கேட்போம். அவர்கள் கொடுத்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம். இதற்காக நாங்கள் அவர்களுடைய செல்போன் நம்பரை கேட்கப் போவது கிடையாது. அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். யார் உடைக்க முயற்சி செய்வது என்று அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி பயணத்திட்டம் என்பது முறையாக எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, அது கிடைத்த பிறகு தான் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் பிரதமரின் வீட்டின் கதவை தட்டவில்லையா? நான் தட்டியதை உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசுகிறார். அவர் என்ன செய்தார். அவர்கள் செய்தால் சரி. நாங்கள் உள்துறை அமைச்சர்கள் சந்தித்தால் தவறா. நான் டெல்லி சென்ற போது முதலமைச்சர் தான் உள்துறை அமைச்சர் சந்தித்தால் தமிழ்நாட்டு பிரச்சனையை எடுத்துக் கூறுங்கள் என்று கூறினார்.
தங்களுடைய கட்சியை வளர்ப்பதற்கு ஒரு தலைவர் ஒரு நடவடிக்கை எடுப்பார். அதை நாங்கள் ஏன் குறை சொல்ல வேண்டும், கருத்து சொல்ல வேண்டும். மக்களுடைய பிரச்சினையை தெரியாத அரசாக தான் திமுக அரசு உள்ளது. நான் விஜய் சீமானை இதுவரை நேரடியாக அழைக்கவில்லை. எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம். தேர்தலுக்குள் நல்ல நிலை உருவாகும்.
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடுகின்றனர். அதே போன்று தான் காவேரி வைகை குண்டார் இணைப்பு திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டில் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட ஒரு மருத்துவமனை என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வறுமையை காரணமாக வைத்து இது போன்ற சம்பவங்கள், திருட்டுக்கள் நடப்பது என்பது மிகவும் வேதனைக்குரிய செயல் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}