டெல்லி: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் , எக்ஸ் பிரிவு, ஒய் பிரிவு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மிக உயர் ரக பாதுகாப்பு என்பது இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவு தான். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இதுவரைக்கும் பிரதமர், முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இதன்காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சகம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது Z+ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜூலை 7ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}