சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று தெரியும் என அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசி உள்ளார்.
2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.திமுக அரசின் பல்வேறு குழப்பமான செயல்பாடுகளால் மக்களும் ஏற்கனவே அதிருப்தியில்தான் உள்ளனர். அதை நாம் பயன்படுத்திக் கொள்வோம். அதுவே நமக்கு தேவையான ஆதரவை இழுத்துக் கொண்டு வந்து விடும் என அதிமுக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
மேலும், தென் மாவட்டங்களில் நமது நிலை மோசமாக இல்லை. கண்டிப்பாக அங்கும் நமக்கு சாதகமான சூழல்தான் உள்ளது. பாஜகவை விரும்பாத, அதேசமயம், திமுகவையும் விரும்பாதவர்கள் ஆதரவு நிச்சயம் அதிமுகவுக்கே வந்து சேரும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கையுடன் உள்ளாராம். கடந்த லோக்சபா தேர்தலில் தேனியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. அதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததும், சிஏஏ சட்டம் உள்ளிட்டவற்றில் அதிமுகவின் நிலைப்பாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த முறை பாஜக நம்முடன் இல்லை, சிஏஏ சட்டத்திற்கு நாம் கொடுத்த ஆதரவுக்கு பாஜக தந்த அழுத்தமே காரணம் என்பதையும் நாம் விளக்கி விட்டோம். இஸ்லாமிய மக்களும் நம்மை நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள். நம்முடன் எஸ்டிபிஐ உடன் இருக்கிறது. இது மிகப் பெரிய பலம். எனவே கடந்த முறை இருந்த நிலை இப்போது இருக்காது.. எனவே கண்டிப்பாக நிச்சயம் நமது வெற்றி இந்த முறை பிரகாசமாக இருக்கும் என்று அதிமுக தரப்பு உறுதியாக நம்புகிறதாம்.
இந்நிலையில், அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அதிமுக அமைக்க போகும் கூட்டணி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் என்றும், அவருக்கு தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும். எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும். என்னென்ன யுக்திகளை கையாண்டு வெற்றி பெற வேண்டும் என்பது தெரியும், அறிவுபூர்வமாக சிந்தித்து முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}