சென்னை: FIRல் குறிப்பிட்ட அந்த சார் யார்..? Sir ஐ காப்பாற்றியது யார்..? ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த sir ஐ, எந்த சாரானாலும் காப்பாற்ற முடியாது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 90 ஆயிரம் அவதாரம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றமும் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். ஆனால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது,
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.
பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.
அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.
FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?
#SIRஐ_காப்பாற்றியது_யார் ?
இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,
அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது என கூறியுள்ளார்.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}