படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

Dec 04, 2025,01:59 PM IST

- வே.தங்கப்பிரியா

சென்னை: கல்வி என்பது அறிவு, திறன்கள், ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கங்களை வளர்த்தல் ஆகும்.கல்வி ஒருவரை சிறந்த குடிமகனாக உருவாக்குகிறது.வாழ்க்கையில் நாம் வெற்றி பெற கல்வி மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கிறது.கல்வி ஒரு புதிய சமூகத்தை உருவாக்குகிறது.இது சமூகத்தின் நற்பண்புகளை வளர்க்கிறது.கல்வியை நிறைய வழிமுறைகளில் பெறலாம்.

கல்வி என்பது நமக்கு இரண்டு விதத்தில் கிடைக்கிறது.


பள்ளிகள்,கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் கல்வி புத்தகங்கள், அனுபவங்கள் மூலம் பெறும் கல்வி.


கல்வி என்பது அறிவு பெறுவது மட்டுமல்லாமல் அந்த அறிவை நல்ல முறையில் பயன்படுத்தும் திறமையும் இருக்க வேண்டும்.நம் வாழ்வில் மிகப்பெரிய செல்வம் என்றால் அது கல்விச் செல்வம் மட்டும் தான்.நாம் வாழ்வில் எவ்வளவு கற்கிறோமோ அந்த அளவுக்கு நம் அறிவு வளரும்.


" மனிதனின் அறிவுக்கண்களை திறந்து வைக்கும் ஆயுதம் கல்வி"




கல்வியில் சிறந்து விளங்கினால் பகைவரும் நட்பு கொள்ள விரும்புவர்.பல உயர்ந்த வேலை வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.மாதந்தோறும் கைநிறைய ஊதியம் அளிக்கும்.தன் குடும்ப, சமுதாய,நாடு மற்றும் உலக மேம்பாட்டிற்கு இயன்ற சிந்தனைகளையும், பொருள் உதவிகளையும் வள்ளல் போல வாரி வழங்கலாம்.


உலகில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றது. இருந்தாலும் சிறந்த உயிரினமாக ஆறறிவு பெற்ற மனிதனயே நாம் போற்றுகிறோம். இந்த மதிப்பும் மரியாதையும் மனிதன் அவன் பெற்ற கல்வி அறிவிற்கு சான்றாகும்.


நீரில் இருந்து பாலை பிரித்து அருந்தும் அன்னப்பறவை போல கல்வி கற்றவனால் மட்டுமே நல்லவற்றை நாடி செல்ல முடியும். நம் வாழ்வின் நோக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் கல்வியை நாம் உயிர் மூச்சை போல போற்றுவோம். நல்ல புத்தகங்களை படித்து அறியாத தகவலை அறிந்து கொள்வோம். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனுடன் வருவது கல்வி மட்டும் தான். நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நமக்கு துணையாக நிற்கிறது. 


சமூகத்தில் நிலவும் அறியாமையை போக்கி நாட்டின் வளர்ச்சியை உருவாக்குகிறது. மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வளர்வதற்கும் ,புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் கல்வி உதவுகிறது. பள்ளி கல்லூரிகளில் மற்றும் கற்பது கல்வி அல்ல கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் நம்முடன் தொடரும் ஒரு பயணமாகும். 


"கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு 

உன்னுடையவர் கல்லா தவர்" 


என்று வள்ளுவர் தன் குரலில் கற்றவர்கள் மட்டுமே கண்ணுடையவர்கள் என்றும் கல்லாதவர் கண்ணிருந்தும் இல்லாதவர்கள் என்று கூறுகிறது. 


கல்வி கற்பதற்கு வயது என்றுமே ஒரு தடையே இல்லை. என்ன வயதானாலும் நம் மூச்சு இருக்கும் வரை நாம் எதையாவது கற்றுக் கொண்டே இருப்போம். இந்த சமூகம் உயர்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவர் மனதிலும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் கற்க ஆரம்பித்து விட்டால் நம் நாடு கல்வி வளர்ச்சி நாடாக இருக்கும் என்று கூறுவது சிறப்பு. 


கல்வி ஒருவருக்கு கண்களை தரும். அது வாழ்வின் இருளை நீக்கி அறிவின் ஒளியை வழங்குகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன்னுடைய வாழ்விலும் சமூகத்தின் முன்னேற்றத்தில் கல்வியின் பங்களிப்பை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை ஆகும். 


"கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று கல்வியின் சிறப்பை மூதுரை கூறுகிறது. 


"பிச்சை புகினும் கற்கை நன்றே"என்கிறார் அவ்வையார். எவ்வளவு கஷ்டப்பட்டாவது கல்வியைப் பெற்று விட வேண்டும் என்பதை இந்த பாடல் உணர்த்துகிறது.


உலகின் முதல் தத்துவஞானி ஆக போற்றப்படுகிற சாக்ரடீஸ் நஞ்சூட்டப்படும் வரை புத்தகங்களை அவர் கற்ற கல்வி தான் அவரை அறிவியலாளராக மாற்றியது. அவ்வையார் தமிழ் கல்வி மீது புலமை கொண்டமையே அவரை இன்றளவு இந்த தமிழ் உலகம் நினைவில் வைத்திருக்கிறது. கல்வியை அனைவருடனும் பகிர்ந்து மற்றவர்களும் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைத்து மனிதர்களின் கடமையாகும். கல்வினை பெறுதல் என்பது ஒவ்வொருவரின் பிறப்புரிமை ஆகும். 


கல்வியை அடுத்தவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவம் அறிந்து அதுவும் நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியை அனைவரும் கற்க வேண்டும்.


(வே.தங்கப்பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

news

மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்

news

பாஞ்சராத்திர தீபத்தின் முக்கியத்துவம் என்ன.. அதை ஏற்றுவது ஏன்?

news

தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ.320 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்