- த. சுகந்தி
எனக்கு ஒரு அண்ணன் இருக்கார் என்று பல தங்கைகள் பெருமிதமாக சொல்வதைப் பார்த்திருப்போம்.. ஆனால் இந்த உண்மைக் கதையில் வரும் அண்ணனைப் பற்றி இந்த தங்கை நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்திருப்பதைப் படிக்கும்போது உண்மையிலேயே எல்லோருக்குமே இப்படி ஒரு அண்ணன் வேண்டும் என்ற ஏக்கம் பிறக்கும்..
மயிலாடுதுறையைச் சேர்ந்த த. சுகந்திதான் அந்த பாசக்கார தங்கை.. தனது அண்ணன் குறித்து அவர் கூறியதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போமா...
திருவாரூரில் பிறந்தாலே முக்தி கிடைக்கும் என்பதை போல் திருவாரூரில் பிறந்து முக்தி அடைந்த அருள்ராஜ் வழக்கறிஞர் அவர்களின் தன்னம்பிக்கையை படித்துப் பார்த்து நாம் முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் என்பதை உணரலாம்.
பாண்டிய மன்னர்கள் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அக்கா சாலையில் சில வருடங்கள் வளர்ந்த பின்பு, திருவாரூரில் கல்வி கற்று ஏழை மக்களுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் குறைவான பணத்தில் தீர்ப்பு கிடைக்க வழிவகை செய்த அருள்ராஜ் அவர்களின் வாழ்க்கை பயணத்தை பார்ப்போம்.
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு ஆரம்பத்தில் கல்வி சிறப்பாக விளங்க வேண்டும் என்று கூற முடியாது ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதையும் நாம் உணர்ந்து பார்க்க வேண்டும் .
ஆரம்ப கல்வியான எட்டாம் வகுப்பு வரை நன்றாக படித்துவிட்டு,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 பாடத்தில் தோல்வியடைந்து திரும்ப தேர்வு எழுதி 2 பாடத்தில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்பு படிக்க விருப்பம் இல்லாமல் டெல்லிக்கு சென்று சில மாதங்கள் உறவினர் வீட்டில் தங்கி ஏதேனும் தொழிலை கற்றுக் கொள்ள சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கி இருந்ததால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச கற்றுக் கொண்டார். வாழ்க்கை பாடத்தை உணர்ந்து,படிப்பின் அவசியத்தை உணர்ந்து தொழிலை கற்றுக் கொள்ளாமல் வந்து விட்டார் .
டெல்லியில் இருந்து திருவாரூர் வந்த பிறகு தனியார் பயிற்சி நிலையத்தில் (டுட்டோரியல் )12ம் வகுப்பு படித்து தனித் தேர்வாக எழுதி ஒரே முறையில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்தார். கல்லூரியில் BCA சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்(Passport) வரும் நேரத்தில் பள்ளியில் படித்த மாணவர்களுடன் வேளாங்கண்ணி சுற்றி பார்க்க சென்றபோது தவறாக காவல்துறையினரால் தண்டிக்கப்பட்டு அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு சரியான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணினார். கல்லூரியில் படிக்கும் போது கலைத்துறையில் ஊமை நாடகத்தில் சிறப்பாக பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார். சில வருடங்கள் சென்னை ஐடி நிறுவனத்திலும், பெங்களூர் தனியார் துறையிலும், தஞ்சாவூர் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் வேலை பார்த்தார்.
வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை விட தனது அங்கீகரமான பாஸ்போர்ட் பெற வேண்டும் என்பதற்காக BCA படித்த பின்பு வழக்கறிஞராக பணிபுரிய வேண்டும் என்று திசை திரும்பி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வழக்கறிஞர் படிப்பில் இணைந்து, (LLB ) பல விதமான மனஉளைச்சலுடன் படித்து தேர்வில் தோல்வி அடைந்தாலும், சில சூழ்நிலையால் தேர்வு எழுத முடியாமல் இருந்தாலும் தனது இலக்கை அடைய பல முயற்சிகள் செய்து தேர்வில் வெற்றி இறுதியாக LLB பட்டம் பெற்றார். மேலும் கிரிமினாலஜி, தடயவியல் போன்ற பட்டய வகுப்புகளை படித்து தனது அறிவை பெருக்கிக் கொண்டார்.
தனது படிப்பின் மூலம் திரும்பவும் பாஸ்போர்ட் பெற்றார். ஆனால் வெளிநாட்டுக்கு செல்ல மனமில்லாமல் பிறந்த நாட்டில் தான் வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணினார்.
திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, ஏழை மக்களுக்கு இலவசமாக ஆலோசனைக் கூறியும், விவாகரத்து வழக்குகளை எளிய முறையில் தீர்த்து வைத்தும் ,குறைந்த கட்டணத்தில் மக்களுக்காக வழக்குகளில் ஆஜராகி, விரைவாக தீர்ப்பு கிடைக்கும்படி சிறப்பாக வாதாடி, யாரும் வாதாடுவதற்கு தயங்கும் கேஸ்களை எடுத்து வெற்றி பெற்றும் சாதித்தார்.
கூடவே நட்பு வட்டத்தையும் விடவில்லை. தனது பள்ளிக்கூட முஸ்லீம் நண்பருக்கு மிகச் சிறிய பெட்டிக்கடை ஒன்றை அமைத்துக் கொடுத்து அவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார். காவல்துறை நண்பருடன் இணைந்து ஊமை நாடகத்தை நடிக்க பயிற்சி கொடுத்து பரிசு பெற்றார்.
AT Association என்ற நிறுவனத்தில் GST யும், வக்கீல் தொழிலும் செய்து வந்தார். இணைய வழியில் சில மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும் வந்தார். AI மூலம் தனது நிறுவனத்திற்கு விளம்பரம் செய்துள்ளார். சுதந்திர தினத்தன்று பிறந்தநாள் என்பதால் இத்தனை போராட்டங்கள் வாழ்க்கையில் நடந்ததா என்று தெரியவில்லை.
அது இலக்கை அடைய பல ஆண்டுகள் ஆனதால், ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று எண்ணினார். பிறகு தனது விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிய பிறகு, திருமணம் செய்ய விரும்பு நேரத்தில் 35 வயதை கடந்ததாலும்,வசதிகள் அதிகம் இல்லாததாலும் திருமணம் அமையவில்லை. பிறகு இணைய வழியில் இலங்கையில் இருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 30 நாட்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு இவரிடம் வசதி வாய்ப்பு இல்லை என்று கூறி அந்தப் பெண் இலங்கைக்கேத் திரும்பிச் சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த அவர், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை போல் குடிக்கு அடிமையாகி கல்லீரல் பாதித்து மரணம் அடைந்தார். வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் இருந்தபோது விதியை மதியால் வெல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெற்றார்.
ஆண்டவன் எழுதிய தலையெழுத்தை மாற்ற முடியாது என்பதை போல் வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழந்து திசை மாறிய வாழ்க்கையாக அமைந்துவிட்டது. அவர் இறந்த பிறகு, அவரின் பல நண்பர்களுடன் பேசும்போது பல உதவிகளை செய்த இவனுக்கா இந்த நிலைமை என்று கேட்கும் போது மனம் வலிக்கிறது. அவர் இறந்த பிறகு தான் அண்ணனைப் போல் நானும் பல மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது .
தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுவில் எனது மகள் மற்றும் மகன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள். இதன் மூலம் எனது குழந்தையின் தனித்திறமை சிறப்பாக காணப்பட்டது. நான் ஏதாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணி தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுவில் ஒருங்கிணைப்பாளராக சேர்ந்து இணைய வழியில் பல நிகழ்வுகளை சேவையாக செய்ய வாய்ப்பளித்தும், அருள்ராஜின் நினைவாக அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை என்ற குழுவில் சில நிகழ்வுகளை நடத்த வாய்ப்பு அளித்த இரத்தினா செந்தில்குமார் அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
கொடிது கொடிது இளமையில் வறுமை!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}