சென்னை: எல் நினோ சூழல் விலகி விட்டதாகவும், வருகிற தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சூப்பரான மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார்.
கிரகங்களில் எப்படி "சனி"ப் பெயர்ச்சி வந்தால் ஆட்டிப் படைக்குமோ அது போலத்தான் காலநிலை மாற்றத்தில் இந்த எல் நினோ. அது வந்தால் கால நிலையே மாறிப் போய் விடும்.. ஒன்று அதீத மழை இருக்கும் இல்லாவிட்டால் அதீத வெயில் வெளுக்கும். சராசரியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாற்றம் ஏற்படும். அதீத மழை வந்து வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவது அல்லது மழையே இல்லாமல் வறட்சியைக் கொண்டு வருவது என்று எல் நினோ படுத்தி எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது நிலவி வந்த எல் நினோவானது விலகி விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் குட் நியூஸ் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், எல் நினோவுக்கு குட்பை. காவிரி டெல்டா பகுதியில் நிலவி வரும் அனைத்து தண்ணீர்ப் பிரச்சினையும், வருகிற தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில் நீங்கி விடும் என்று கூறி அனைவரின் மனதிலும் பால் வார்த்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சரிவர மழை இல்லை. கடந்த வட கிழக்குப் பருவ மழையின்போது எல்லா அணைகளும் நிரம்பியும் கூட மேட்டூர் அணை மட்டும் காலியாகக் கிடந்தது. இது மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. கர்நாடகமும் தண்ணீர் திறந்து விடுவதில் டேக்கா காட்டி வந்தது. அங்கும் கூட சரியாக மழை இல்லை.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு வெதர்மேன் சொல்லியுள்ள இந்த பெரிய செய்தி மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக டெல்டா பகுதி மக்களை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
மழையாரே.. எல் நினோ போய்ருச்சுன்னு காவிரியை வச்சு செஞ்சுராதீங்க.. பார்த்துப் பதமா பெய்யுங்க.. ஓகேவா!!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}