என்னே ஒரு பக்தி.. 32 ஆண்டுகளாக பேசாமல்.. மெளன விரதம் இருக்கும் பாட்டி.. காரணம் "ராமர்"!

Jan 10, 2024,06:13 PM IST

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுனாதான் பேசுவன் என மூதாட்டி ஒருவர் 32 ஆண்டுகளாக விரதம் இருந்து வந்துள்ளார்.  தற்போது ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, அதன் திறப்பு நாளான ஜனவரி 22ம் தேதி தனது மெளன விரதத்தை கலைக்க முடிவு செய்துள்ளார் அந்த மூதாட்டி.


அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயில் கட்டும் பணியை பிரதமர்  நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். தற்பொழுது பணிகள் முடிந்த நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. ராமரின் குழந்தைப் பருவ சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.




ராமர் கோவில் திறப்பையொட்டி எங்கு பார்த்தாலும் அதுகுறித்த செய்திகள்தான் கண்ணில் படும்படி உள்ளது. டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதுகுறித்த பதிவுகள்தான் அதிகம் கண்ணில் படுகின்றன. மற்ற எந்த டிவீடிட்டையும், போஸ்ட்டையும் பார்க்கவே முடியவில்லை. ராமர் மயமாகத்தான் உள்ளது.


அப்படித் தான் தற்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது. என்ன தெரியுமா? ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை சுமார் 32 வருடங்கள் ஒரு பாட்டி மவுன விரதம் இருந்துள்ளார். எதற்கு தெரியுமா? ராமர் மீது கொண்ட பக்தியினால்தானாம். இப்படியொரு பக்தியா என்று அனைவரையும் அந்த பாட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 


ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி தேவி  என்ற 85 வயது மூதாட்டி கடந்த  32 ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால்தான் நான் பேசுவேன் என்று கூறி கடந்த 32 வருடமாக மெளன விரதம் இருந்து வருகிறார். தற்போது அவரது கனவு நனவாகப் போகிறது. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளவுதால் பாட்டி ஹேப்பியாகி விட்டார். ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22 ஆம் தேதியுடன் மௌன விரதத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.


1986 ஆம் ஆண்டில் தனது கணவர் தேவகி நந்தன் அகர்வாலை இழந்தார். அன்றிலிருந்து தன் வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்துள்ளார். அதன் பின்னர் பல கோயில்களுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ராமருடைய தீவிர பக்தரான சரஸ்வதி தேவி அங்குள்ள கோயில் கட்டப்படும் வரை மௌன விரதம் இருக்கப் போவதாக உறுதி எடுத்தாராம். தினமும் 23 மணி நேரம் மௌன விரதமும், ஒரு மணி நேரம் மட்டும் பேசிக்கொண்டும்  இருந்துள்ளார். ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணி நேரமும் மௌனவிரதத்தை கடைபிடித்து வந்துள்ளார். 


ஒரு நாளைக்கு, ஆறு முதல் ஏழு மணி நேரங்கள் தியானமும் செய்து வந்துள்ளார். ஒருமுறை மட்டுமே உணவு எடுத்துக்கொண்டு இருந்ததாகவும், காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் பால் மட்டும் குடித்து வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மாலையில் ராமாயணம் பகவத் கீதை போன்ற சமய புத்தகங்களை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் இந்த பாட்டியம்மா.


எப்படியோ பாட்டியம்மா இனியாவது கலகலப்பாக பேசி, பேரப் பிள்ளைகளுக்கு கதை சொல்லி மகிழ்விக்கட்டும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்