டெல்லி: லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இதில், தமிழ்நாட்டுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடந்தது. அத்தோடு விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் அந்தத் தொகுதி தற்போது காலியாக உள்ளது.
இந்தப் பின்னணியில் கடைசி கட்ட லோக்சபா தேர்தலின்போது விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் அந்தத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது லோக்சபா தேர்தல் இன்னும் முடிவடையாமல் உள்ளதால், இத்தோடு சேர்த்து விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தலை நடத்தி முடித்து விட்டால் பணிகள் எளிதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.
அனேகமாக கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!
கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!
கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!
{{comments.comment}}