திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி சர்ச்சையாக பேசியதாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் சேர்த்து மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு 25 மக்களவைத் தொகுதிகளும்,175 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, அரக்கன், விலங்கு, திருடன், மக்களை காட்டி கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் என பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.
இது ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் லெல்லா அப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார். அந்த ஆடியோவில் தேர்தல் விதிகளை மீறியதாக பேச்சு இருந்தது தெரியவந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 48 மணி நேரத்தில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுவரை சந்திரபாபு நாயுடு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்படவில்லை.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}