சென்னை: மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சிக்கு தான் இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று கோரிய ஓபிஎஸ் மனுவை நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக கட்சியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் பிரிந்தனர். இதில் ஒபிஎஸ் எனக்கு தான் அதிமுக கொடி, சின்னம் சொந்தம் என்றும், இல்லை எனக்கு தான் சொந்தம் என்று இபிஎஸ்சும் மாறி மாறி கூறி வந்தனர். இந்நிலையில், இபிஎஸ் அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதி ஓபிஎஸ் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கோர்ட் தடை விதித்தது. அதன் பின்னர் ஓபிஎஸ் அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த நிரந்தர தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனை ஏற்க்க மறுத்தார் ஓபிஎஸ். இந்நிலையில், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வா புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, விசாரணையின்போது, அதிமுகவில் இரு அணிகள் உள்ளதா.. இரண்டு அணிகளும் ஒரு சின்னத்திற்கு உரிமை கோருகிறதா.. என கேள்வி எழுப்பினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி வாதிடுகையில், அதிமுக ஒரே அணியாக தான் உள்ளது. யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களுக்குத்தான் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் . அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தான் பொதுச்செயலாளராக நியமித்து உள்ளனர். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே உள்ளது என்று வாதிட்டார்.
இந்நிலையில் இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தார் ஓபிஎஸ். மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சிக்கு தான் இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று கோரிய ஓபிஎஸ் மனுவை நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}