டெல்லி: எக்ஸ் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள போல்ட் ஃபான்ட் ஆப்ஷனை பலரும் மிஸ் யூஸ் செய்ய ஆரம்பித்திருப்பதால் கடுப்பாகியுள்ளார் எக்ஸ் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க். இதையடுத்து அந்த ஆப்ஷனை மெயின் டைம்லைனில் காட்டாதபடி நீக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எக்ஸ் தளம் எலான் மஸ்க் வசம் வந்த பிறகு ஏகப்பட்ட மாற்றங்களைக் கண்டு வருகிறது. கம்பெனி பெயரே கூட டிவிட்டர் என்பதிலிருந்து எக்ஸ் என்று மாறி விட்டது. தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் எலான் மஸ்க், இடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக தீவிரமாக களமாடி வந்தார். டிரம்ப் மீண்டும் ஜெயித்தால் அமைச்சர் பதவி கூட மஸ்க்குக்குத் தரப்படும் என்று பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் ஒரு மாற்றத்தை செய்ய உத்தரவிட்டுள்ளார் எலான் மஸ்க். அதுதான் தற்போது பலரும் தங்களது பதிவில் பயன்படுத்தி வரும் போல்ட் ஃபான்ட் ஆப்ஷன். ப்ளூ டிக் வைத்துள்ளோருக்கு மட்டுமே இந்த போல்ட் பான்ட் யூஸ் பண்ணும் வசதி உள்ளது. போல்ட் மட்டுமல்லாமல் இட்டாலிக் ஃபான்ட்டையும் கூட இவர்கள் பயன்படுத்த முடியும்.
ஆனால் இந்த வசதியை பலரும் குண்டக்க மண்டக்க பயன்படுத்தி வருகின்றனர். அதாவது இஷ்டத்திற்கு போல்ட் ஃபான்ட்டை பயன்படுத்தி போஸ்ட் போடுவதால் எலான் மஸ்க் கடுப்பாகி விட்டாராம். இதுகுறித்து அவர் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், போல்ட் ஃபான்ட்டையும், இட்டாலிக் ஃபான்ட்டையும் பலரும் அதீதமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மெயின் டைம்லைனில் இவற்றை பார்க்க முடியாதபடி நீக்க உத்தரவிட்டுள்ளேன். தேவை என்றால் சம்பந்தப்பட்டவர்களின் பக்கத்திற்குப் போய் தான் பார்க்க முடியும். போல்ட் ஃபான்ட் போஸ்ட்டாக பார்த்துப் பார்த்து கண்ணெல்லாம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.
மஸ்க்கே கடுப்பாகும் அளவுக்கு நம்மாட்கள் இப்படி போட்டுத் தாக்குவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேசமயம், மக்களுக்கு ஏதாவது கிடைத்தால் அதை சரமாரியாக போட்டுத் தாக்கி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. மஸ்க்கை கடுப்பேற்றுவதற்காகவே இப்போது பலரும் போல்ட் ஃ பான்ட்டை பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் பாருங்க!
Bold and Beautiful என்றுதான் எலான் மஸ்க் இந்த ஆப்ஷனை ஏற்படுத்தியபோது நினைத்திதருப்பார்.. ஆனால் ஓவராக பயன்படுத்தி மஸ்க்கை நம்மாட்கள் Furious ஆக்கி விட்டார்கள்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}