நெல்லை : கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நெல்லை மாவட்டத்திற்கு அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்ட அணைகளும் வேகமாக நிரம்பி, அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்ற காலை வரை மட்டும் பல அணைகளில் 16 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு நெல்லையில் கனமழை பெய்யும். நாளை காலைக்குள் 300 மி.மீ., வரை மழை பதிவாகலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மக்களுக்கு உதவும் வகையில் அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவரச உதவி எண்கள் :
மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1077
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1070
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி - 101, 102
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு - 9498794987
மழைக்கால நோய்கள் தொடர்பாக - 104
அவசர மருத்துவ உதவிக்கு - 108
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}