மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடாத நிலையில், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கூட அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் விளையாட முடியவில்லை என்று விராட் கோலி கூறியிருந்தார். அதே முடிவு காரணமாக தற்போது மீதம் உள்ள 3 போட்டிகளிலும் கூட அவர் விளையாடவில்லை. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட ஆரம்பித்த பிறகு தற்போதுதான் முதல் முறையாக ஹோம் சீரிஸ் ஒன்றை விளையாடாமல் தவிர்த்துள்ளார் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. மீதமுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல். ராகுல், ரஜத் படிதார், சர்பிராஸ் கான், துருவ் ஜுரல், கே.எஸ். பாரத், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

இதில் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக முதல் இரு போட்டிகளில் விளையாடவில்லை. அவர்கள் பிட்னஸ் உறுதிப்படுத்தப்பட்டால் 3 போட்டிகளிலும் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23ம் தேதியும், 5வது மற்றும் கடைசி போட்டி தரம்சலாவில் மார்ச் 7ம் தேதியும் நடைபெறும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}