சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்து பிளஸ் ஒன் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் தொடங்கவுள்ளன. பிளஸ் டூ தேர்வை மொத்தம் 7. 25 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தடை இன்றி தேர்வுகளை படித்து எழுத தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்கள் படிக்க சிரமமப்படுவார்கள் என்பதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிவிப்பில், 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது. அனைத்து மின்வாரிய தலைமை பொறியாளர்களும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}