மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

Sep 03, 2025,04:04 PM IST

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த   பாடில்லை, மழைநீரும் வடிந்த பாடில்லை,

அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை, இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


சென்னை அரும்பாக்கத்தில் மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தீபா என்ற பெண் விழுந்து உயிரிழந்துள்ளார். மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


இந்நிலையில், தீபா இறந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.




மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது 


உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன.


மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?


ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று மு.க. ஸ்டாலின் சொல்வாரா?


மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த   பாடில்லை;

மழைநீரும் வடிந்த பாடில்லை;

அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை;

இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?


தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க  வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.


மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்