ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாளையுடன் அனல் பறக்கும் பிரசாரம் முடிவடையவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம்தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து அவரவர் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கப் பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில், இளங்கோவனுக்காக மிகத் தீவிரமான பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

முக்கியத் தலைவர்கள் பிரசாரம் செய்து வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 25ம் தேதி பிரசாரம் செய்யவுள்ளார். ஏற்கனவே இளங்கோவனுக்காக உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்துள்ளனர். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.
அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக வேட்பாளருக்காக பேசி விட்டுப் போயுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். தேமுதிக சார்பிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனல் பறக்க நடந்து வரும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் 26ம் தேதி ஓய்வு நாளாகும். 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
பிரசாரம் ஓயும் 25ம் தேதி மாலை 5 மணியுடன் வெளியூர்க்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். அதன் பிறகு தொகுதியில் அவர்கள் தங்கியிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}