ஈரோடு கிழக்கில்.. விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. பலத்த பாதுகாப்பு

Feb 27, 2023,09:13 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. விறுவிறுப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொட்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்றே செய்து முடிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை  6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆன்மீகக் கதை.. ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா? 


பதட்டமான வாக்குச் சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 32 பூத்துகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படையினரும் அமைக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், லாட்ஜுகளில் யாரேனும் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனரா அல்லது தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்ற சோதனையும் தொடர்ந்து நடைபெறுகிறது. 


இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்கள் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.


இடைத் தேர்தலை வெல்வது திமுக , அதிமுக இடையே மிகப் பெரிய கெளரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. தொகுதியை வென்றால், அது  ஸ்டாலின் அரசு நல்லாட்சி நடத்துவதாக மக்கள் தீர்ப்பளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்று திமுக நம்புகிறது. அதேசமயம், அதிமுக வென்றால், எடப்பாடி பழனிச்சாமி தனது செல்வாக்கை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக அக்கட்சி பார்க்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் அவரது அணிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்த நிலையில் இத்தேர்தல் நடைபெறுவதால் எடப்பாடி தரப்பு பெருத்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பில் உள்ளது.


இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்