ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
ஈரோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்த தொகுதியில் வருகிற 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
திமுக தரப்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத்சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது இன்று தொடங்கிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்ரவரி 1ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில், 209 முதியவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்குகள் செலுத்த விண்ணப்ப படிவம் வழங்கி இருந்த நிலையில் அவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதை அடுத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான அறை பாதுகாப்பு அறைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
{{comments.comment}}