ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம்!

Jan 20, 2025,07:08 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல். ஏ.வாக இருந்தவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத்தொடர்ந்து அங்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 




திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என முக்கியக் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. மற்ற அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்து விட்டன. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளராக சீதாலட்சுமி மட்டுமே முக்கியக் கட்சிகளாக களம் காண்கின்றனர்.  மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது.  இன்று 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் இந்த இடைத்தேர்தலை களம் காண உள்ளனர்.


இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கட்சித் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் மறுத்துவிட்டார்.  இதனால் 2வது முறையாக மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கவுள்ளது.  கடந்த லோக்சபா தேர்தலின்போதுதான் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்