ஈரோடு: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
நாடாளுமன்ற உறுப்பினரான கணேசமூர்த்தி மதிமுக வின் பொருளாளராக பதவி வகித்து வந்தார். 1983 ஆம் ஆண்டு வைகோ திமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களில் ஒருவர். அன்று முறை வைகோவுடனேயே இருந்து வந்தார். கடந்த2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியால், கடந்த மார்ச் 24ஆம் தேதி சல்பாஸ் என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக எம்பி கணேசன் மூர்த்தியை ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர் . இதனைத் தொடர்ந்து அவருக்கு சமீப காலமாக மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவக் கண்காணிப்பில் இருந்த எம் பி கணேசன் மூர்த்திக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அவசரப்பட்டு விட்டார் கணேசமூர்த்தி என்று வைகோ வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கணேசமூர்த்தி காலமானார்.
கணேசமூர்த்தியின் மறைவு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
{{comments.comment}}