மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவர்.. கார்கில் ஹீரோவின் மனைவி!

Jul 21, 2023,03:36 PM IST
டெல்லி: மணிப்பூரில்  மெய்தி இன வெறியர்களிடம் சிக்கி நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர், முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்று தெரிய வந்துள்ளது.

இந்த ராணுவ வீரர் கார்கில் போரில் பங்கேற்றவர் ஆவார். கார்கில் ஹீரோவின் மனைவிக்கே இந்த கதியா என்று நாடே அதிர்ந்து போய் நிற்கிறது.

மணிப்பூர் அவலத்தை யாராலுமே இன்னும்  ஜீரணிக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.  மனதைப் போட்டு உலுக்கிக் கொண்டிருக்கின்றன அந்த குரூர காட்சிகள். இந்த சம்பவம் தொடர்பாக  தொடர்ந்து அடுக்கடுக்காக பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.



அந்த வன்முறை வெறியாட்டத்தின்போது இரண்டு இளம் பெண்களை நிர்வாணப்படுத்தியும், பாலியல் ரீதியாக குரூரமாக நடந்து கொண்டும் தெருத் தெருவாக அழைத்துச் சென்றது அந்தக் கும்பல். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர்  முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அஸ்ஸாம் ரெஜிமென்ட் பிரிவில் சுபேதாராக பணியாற்றியவர். கார்கில் போரில் பங்கேற்ற வீரரும் கூட.

இவர் தனது மனைவிக்கு நேர்ந்த கதி குறித்து உள்ளூர் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், கார்கில் போரில் கலந்து கொண்டு எனது நாட்டை நான் காப்பாற்றினேன். இலங்கையிலும் கூட  நான் இந்திய அமைதி காக்கும் படையில் ஈடுபட்டு பணியாற்றியுள்ளேன்.  எனது தேசத்தை காப்பாற்ற முடிந்தது. ஆனால் என்னால் எனது மனைவியின் மானத்தைக் காப்பாற்ற முடியவில்லை.  எனது சொந்த கிராமத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

மே 4ம் தேதி காலை, ஒரு பெரிய கும்பல் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை தீவைத்து கொளுத்தியது. பெண்கலை எல்லாம் அவர்கள் மானபங்கப்படுத்தினர்.  எனது மனைவி உள்ளிட்ட இரண்டு பெண்களையும் பிடித்து ஆடைகளை எல்லாம் அவிழ்த்து நிர்வாணமாக நிறுத்தி வைத்தனர்.  அங்கு அப்போது போலீஸார் இருந்தனர். ஆனால் யாருமே தடுக்கவில்லை. 

வீடுகளை எரித்தவர்களை, பெண்களை மானபங்கப்படுத்தியவர்களை ஒருவரை கூட விடக் கூடாது. அத்தனை பேருக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குமுறியுள்ளார் அந்த முன்னாள் ராணுவ வீரர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்