சென்னை: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீரென புகழ்ந்து டிவீட் போட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
என்னாச்சு நம்ம தலைவருக்கு.. திடீர்னு காங்கிரஸ் தலைவரை புகழ்ந்து பேசி அலப்பறையை பண்ணிட்டாரே என்று அதிமுகவினரே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அதிமுகவும், பாஜகவும் ஒரு காலத்தில் கூட்டணி கட்சியாக இருந்து வந்தன. அப்போது பாஜக தலைவர் நரேந்திர மோடியை புகழாத அதிமுக தலைவர்களே கிடையாது. பாஜக, முன்னாள் தலைவர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அதிமுக குற்றம் சாட்டியது. இதனால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

ஆனால் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணியில் விரிசல் இல்லை. கட்சிக்குள் சிறு சிறு மனஸ்தாபம்கள் வருவது இயல்பு தானே என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பாஜகவுக்கும் அதிமுகவும் இடையே பிரிவு ஏற்பட்டு கூட்டணி கட்சியில் விரிசல் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிமுக லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. போற இடமெல்லாம் அதிமுக தலைவர்கள் பாஜகவை விமர்சிக்க, பாஜக தலைவர்கள் அதிமுகவை விமர்சிக்க என்று அனல் பறந்தது.
குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர் சில அதிமுக தலைவர்கள். செல்லூர் ராஜு, அரை வேக்காடு அண்ணாமலை என்றெல்லாம் விமர்சித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜு ட்விட் போட்டுள்ளார். அதில் நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என பதிவிட்டு ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளிடம் பேசிக்கொண்டே உணவு அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ட்விட் மூலம் அதிமுக மக்களுக்கு மறைமுகமாக என்ன சொல்ல வருகிறது.. அடுத்த ஆட்சி அமைக்க போவது காங்கிரஸ் என்றா.. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ஆகப் போகிறார் என்று அதிமுக சொல்லாமல் சொல்கிறதா என்று பரபரப்பான விவாதங்கள் கிளம்பி உள்ளது.
செல்லூர் ராஜு முன்பு வைகை ஆற்றில் தெர்மகோல் அட்டைகளைப் போட்டதைத் தொடர்ந்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தாலும், பேசினாலும் அது வைரலாகி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
{{comments.comment}}