சென்னை: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2024-2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் நடந்தது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகை, அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கு சொத்துவரி வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணையை முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்படுத்த நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம்:
* முன்னாள் படை வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
* முன்னாள் படை வீரர் குடியிருக்கும் கட்டடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.
* வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
* ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மறு வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணியில் வேலை செய்யக்கூடாது.
* மறு வேலையில் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இந்த திட்டத்தின் மூலம் 1.20 லட்சத்திற்கு அதிகமான முன்னாள் ராணுவ படை வீரர்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}